ராயகிரி பேரூராட்சி தலைவர் பதவி ஆண்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுமா?

சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவராக ஏற்கனவே தொடர்ந்து 2 தடவை பொது பெண்கள் பிரிவினரும், தொடர்ந்து 2 தடவை பொது எஸ்.சி. ஆண்கள் பிரிவினரும் பதவி வகித்து வந்துள்ளனர். எனவே இந்தமுறை பதவியை ஆண்கள் பொதுப்பிரிவுக்கு மாற்ற தேர்தல் ஆணையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சிவகிரி:

சிவகிரி அருகேயுள்ள ராயகிரி பேரூராட்சி தெற்குசத்திரம், வடுகபட்டி, மேலகரிசல்குளம், ஆவுடையாபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 15 வார்டுகளை கொண்டதாகும்.

பேரூராட்சி மன்ற தலைவராக ஏற்கனவே தொடர்ந்து இரண்டு தடவை பொது பெண்கள் பிரிவினரும், தொடர்ந்து இரண்டு தடவை பொது எஸ்.சி. ஆண்கள் பிரிவினரும் பதவி வகித்து வந்துள்ளனர். 

சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பொது ஆண்கள் பிரிவிற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையில் ராயகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் பதவியானது மீண்டும் பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதை கண்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே ராயகிரி பேரூராட்சி அதிகமான எல்லை பகுதியினை கொண்டு உள்ளது.

எனவே பேரூராட்சி மன்ற தலைவர் பதவியினை ஆண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி பேரூராட்சி தேர்தல் ஆணையாளருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com