தென்காசி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக ஒரே நாளில் 2,450 மோட்டார் வழக்குகள்

தென்காசி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரு நாளில் 2,450 மோட்டார் வாகன வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா விதிகளை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், சட்டவிரோதமாக மது விற்பவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

நேற்று காலை முதல் இன்று காலை வரை நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மது விற்றதாக 35 வழக்குகள் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

500&க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர முகக்கவசம் அணியாததாக 630 பேருக்கு அபராதமும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 99 வழக்குகளும், சாலை விதிகளை பின்பற்றாததாக  2,450 மோட்டார் வாகன வழக்குகளும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com