

தென்காசியில் உள்ள பஸ் நிலையம், கோவில், சுற்றுலா தலங்கள் ஆகிய பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருநங்கைகள் தங்களிடம் பிரச்சனை செய்வதாகவும், ஒரு சிலர் மரியாதை குறைவாக நடந்து கொள்வதாகவும் போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தது.
இதையடுத்து அந்த புகாரை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில், தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஏற்பாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்காசியில் உள்ள திருநங்கைகளை போலீஸ் நிலையம் வரவழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அப்போது போலீஸ் நிலையத்தில் திருநங்கைகள் தங்களை அவதூறாக பேசுவதாகவும், மரியாதை குறைவாக நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் அதிக அளவில் புகார் கொடுத்து உள்ளனர் என தெரிவித்தனர்.