கடையம் அருகே காட்டுப் பன்றி இறந்ததை தெரிவிக்காதவருக்கு அபராதம்

கடையம் அருகே காட்டுப் பன்றி இறந்ததை தெரிவிக்காதவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

கடையம்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வனக்கோட்டம் கடையம் வன சரகத்திற்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின்பேரில் கடையம் அருகே உள்ள வடப்பத்து குளம் பகுதியில் தனி குழுவினர்களுடன் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் மண்டை ஓடுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக கடையம் வனச்சரக உதவி வனப்பாதுகாவலர்(பயிற்சி) ராதை விசாரணை செய்தார். அதில் நிலத்தில் கிடந்த மண்டை ஓடுகள் காட்டுப்பன்றியின் மண்டை ஓடுகள் என கண்டறியப்பட்டது. 

இதையடுத்து காட்டுப்பன்றி இறந்தது குறித்து தோட்ட உரிமையாளர், வனத்துறையினருக்கு தெரிவிக்கவில்லை என்று கூறி துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின்படி அவருக்கு ரூ.5 ஆயிரம் இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com