புளியங்குடி முப்பெரும் தேவியர் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை

புளியங்குடியில் உள்ள முப்பெரும் தேவியர் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.
முப்பெரும் தேவியர் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
முப்பெரும் தேவியர் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

புளியங்குடி:

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந்தோறும் (வைகாசி மாதம்) நடை பெறும் சிறப்பு பால் அபிஷேகமும், திருவிளக்குபூஜையும் நடந்தது.

மாலை வைகாசிமாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோயில் குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

6.30 மணிக்கு முப்பெரும்தேவி அம்மனுக்கு பச்சைஅரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப்பொருள்கள் உள்பட 21 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும், கொரானோ வைரஸ் முழுவதும் அழிந்து போகவும், சிறப்புமந்திரங்கள், பிரார்த்தனைகளும் 1008லிட்டரில் சிறப்புபால்அபிஷேகமும், குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடந்தது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலபிஷேகம் நடந்தது.

முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.

இதில் சமூக இடைவெளியுடன் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கில் தீபம் ஏற்றி பாடல்கள் படித்து திருவிளக்கு பூஜை நடந்தது.

பவுர்ணமி பூஜையை முன்னிட்டு இரவு சிறப்பு அன்னதானம்நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com