செங்கோட்டை-நெல்லை இடையே 4 ஜோடி ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும்-பயணிகள் கோரிக்கை

செங்கோட்டை-நெல்லை இடையே 4 ஜோடி ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே மேலாளருக்கு மின் அஞ்சல் மூலம் பயணிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வீ.கே.புதூர்:

தென்காசி தெற்கு மாவட்டம் மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் தெற்கு ரெயில்வே மேலாளருக்கு மின் அஞ்சல் மூலம் கோரிக்கை மனு  அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

பாவூர்சத்திரம், கடையம் உள்ளிட்ட தென்காசி தெற்கு மாவட்ட பகுதி மக்களும், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை உள்ளிட்ட நெல்லை மேற்கு மாவட்ட பகுதி மக்களும் சென்னைக்கு சென்று வர உடனடியாக ரெயில் சேவையை இயக்க வேண்டும்.

செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்ட 4 ஜோடி பயணிகள் ரெயிலையும் உடனடியாக இயக்க வேண்டும். பாலருவி விரைவு ரெயிலை நெல்லையில் இருந்து இரவு 9 மணியில் இருந்து 10 மணிக்குள் புறம்படும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்து எர்ணாகுளத்திற்கு காலை 7 மணிக்கு செல்லும் வகையில் இயக்க வேண்டும்.

கீழக்கடையம், பாவூர்சத்திரம், செங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் பாலருவி ரெயில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com