புளியரையில் அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி

முழு ஊரடங்கையொட்டி செங்கோட்டையில் போலீசார் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். புளியரை சோதனை சாவடியில் அத்தியாவசிய வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர்.
புளியரையில் வெறிச்சோடிய சாலை.
புளியரையில் வெறிச்சோடிய சாலை.
Published on

செங்கோட்டை:

முழு ஊரடங்கையொட்டி செங்கோட்டையில் போலீசார் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும்.

ஆனால் இன்று வாகனம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள் கொண்டு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆம்புலன்ஸ் வாகனங்களும் சென்றன.

மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சி களுக்கு சென்றவர்களிடம் போலீசார் முறையான ஆவணங்களை பார்த்த பிறகு அனுமதித்தனர். தொடர்ந்து அங்கு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முழு ஊரடங்கால் செங்கோட்டையில் எப்போதும்  பரபரப்பாக காணப்படும் அண்ணா பஸ் நிலைய பகுதிகள் திருமங்கலம்& கொல்லம் தேசிய நெடுஞ்சாலைகள் இன்று பொதுமக்கள்& வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடின.

X

Maalai Malar
www.maalaimalar.com