பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலுக்கு மினிபஸ் வசதி-அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலுக்கு மினி பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
மினிபஸ் சேவையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தபோது எடுத்த படம். அருகில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா
மினிபஸ் சேவையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தபோது எடுத்த படம். அருகில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா
Published on

தென்காசி:

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவில் தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கோவிலாகும். இந்த கோவில் மலை பகுதியில் இருப்பதால் பக்தர்கள், கோவிலின் அடிவாரத்தில் இருந்து 544 படிகளை கடந்து தான் மேலே செல்ல வேண்டியிருந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்கு வாகனங்களில் செல்வதற்கு மலைப்பாதை அமைக் கப்பட்டது. படிகளில் ஏறி செல்ல முடியாத பக்தர்கள் வாகனங்களில் செல்லும் வகையில் மலைப்பாதையில் ரூ.1 கோடி செலவில் தார்ச்சாலை அமைக்கப் பட்டது.

இந்நிலையில் கோவில் அடிவாரத்தில் இருந்து மலைப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று வரும் வகையில் 2 மினி பஸ்களை கோவிலின் முன்னாள் அறங்காவலர் கடைய நல்லூர் அருணாசலம் செட்டியார் நன் கொடையாக வழங்கினார்.

நேற்று அந்த மினி பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு மினிபஸ்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், கோவில் செயல் அலுவலர் அருணாச்சலம், இணை இயக்குனர் அன்புமணி, முன்னாள் அறங்காவலர் கடையநல்லூர் அருணாசலம் செட்டியார், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலைக் குமார், கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீப் ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com