அய்யாத்துரை பாண்டியன் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

அய்யாத்துரை பாண்டியன் பிறந்தநாளையொட்டி சங்கரன்கோவில் மற்றும் தென்காசி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்ட காட்சி.
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்ட காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

ஏவிகே கல்வி குழும தலைவர் அய்யாத்துரை பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கரன்கோவில் மற்றும் தென்காசி அரசு மருத்துவமனையில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் மற்றும் புத்தாடைகள், பரிசுகள் அய்யாத்துரைபாண்டியன் பேரவை சார்பில் வழங்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் காளிதாஸ், செயற்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், ஆனந்த், பேச்சிமுத்து, பூலேகராஜ் மற்றும் முப்புடாதி, பசும்பொன், கணேசன், சிவசாமி, குத்தாலிங்கம், ராஜா, அருணாச்சலம், மாரிமுத்து, தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com