சிவகிரி பகுதியில் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக சிவகிரி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சிவகிரி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.
சிவகிரி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.
Published on

சிவகிரி:

நாளை (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி தென்காசி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகிரி, வாசுதேவநல்லூர், ராயகிரி பகுதிகளில் பறக்கும் படையினர் இன்று காலை முதலே தீவிர வாகன சோதனை நடத்தினர்.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com