இனாம்கோவில்பட்டி ஊராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்-யூனியன் தலைவரிடம் கோரிக்கை

சிவகிரி அருகே உள்ள இனாம்கோவில்பட்டி ஊராட்சியில் 3-வது மற்றும் 4-வது வார்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி பொதுமக்கள் வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
ஒன்றிய கவுன்சிலர் செல்வி ஏசுதாஸ் தலைமையில்  மனு அளித்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
ஒன்றிய கவுன்சிலர் செல்வி ஏசுதாஸ் தலைமையில் மனு அளித்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
Published on

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள இனாம்கோவில்பட்டி ஊராட்சியில் 3-வது மற்றும் 4-வது வார்டுகளில் உள்ள தெருக்கள் மேட்டுப்பகுதியாக உள்ளது. 

குடிநீர் குழாய்கள் தாழ்வான பகுதியில் இருந்து மேட்டுப்பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜே.ஜே.எம். குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாலும், தெருவின் நடுப்பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ள நிலையில் வாகனங்கள் போக்குவரத்தினால் குழாய்கள் மேலும் பாதிப்படைந்து குடிநீர் வீணாகிறது. அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குழாய்களில் குடிநீர் சீராக வருவதில்லை.

எனவே அப்பகுதி மக்கள் கைக்குழந்தைகளுடன், வார்டு கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர் செல்வி ஏசுதாஸ் தலைமையில் வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகத்தில் யூனியன் தலைவர் பொன் முத்தையா பாண்டியனிடம் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக யூனியன் தலைவர் பொன் முத்தையா பாண்டியன் உறுதியளித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com