மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விளக்கம்

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய சேவை மையத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மாடித்தோட்டம் அமைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்ட காட்சி.
மாடித்தோட்டம் அமைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்ட காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர்.

இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய சேவை மையத்தில் நடந்த ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் அதன் பயன்கள் பற்றி விளக்கம் அளித்தனர்.

இதில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான பொருட்கள் அடங்கிய மாடித்தோட்ட கிட் அரசு மானியத்துடன் பெறுவது எப்படி என்பதைப் பற்றி விளக்கம் அளித்தனர்.

இதில் உதவி தோட்டக்கலை இயக்குனர் நடராஜ், உதவி தோட்டக்கலை அலுவலர் பொற்கொடி, உதவி தோட்டக்கலை அலுவலர் முனுசாமி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர் ஆண்டாள் ராணி மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

 மாடித்தோட்டம் குறித்து மாணவிகள் விகாசினி, வீரலெட்சுமி, யோக பரமேஸ்வரி, ராஜதிவ்யா, கீர்த்திமதி, ர.கீர்த்தனா, நா.கீர்த்தனா, பிரியதர்ஷினி ஆகியோர் விவரித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com