இலத்தூரில் தென்னங்கன்று நடும் முறை பற்றி செயல் விளக்கம்

இத்தூரில் தென்னங்கன்று நடும் முறை பற்றி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தென்னங்கன்று நடும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்ட காட்சி.
தென்னங்கன்று நடும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்ட காட்சி.
Published on

செங்கோட்டை:

தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வருகிற 23-ந்தேதி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து தமிழகம் முழுவதுமுள்ள தேர்வு செய்யப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி கிராமங்களில்கிராமம் ஒன்றுக்கு 200 பண்ணை குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் விலை இல்லா தென்னங்கன்றுகளை வழங்கி தொடங்கி வைக்க உள்ளனர்.

அவ்வாறு தமிழக முதல்வர் தொடங்கி வைக்கும் திட்டத்தில் வழங்கப்படும் தென்னங்கன்றுகளை வேளாண் பெருமக்கள் தங்களுடைய இல்லத்தின் வளாகத்திலோ அல்லது தோட்டத்திலோ நடும்போது கடைபிடிக்க வேண்டியதொழில் உத்தி முறைகள் பற்றி முன்னதாகவே செயல் விளக்கங்களை செய்துகாட்ட தமிழக வேளாண்மை உழவர் நலத்துறையினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டாரம் இலத்தூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அக்கிராமத்தில் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் நல்ல முத்துராஜா, வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் ஆலோசனையின்படி செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் தென்னங்கன்று நடும் முறை பற்றியும் குழி எடுக்கும் விதம் பற்றியும் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com