வாசுதேவநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாடு

வாசுதேவநல்லூர் அருகே மேலபுளியங்குடி வயனற்காடு பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கிணற்றில் விழுந்த மாட்டினை தீயணைப்பு துறையினர் மீட்ட காட்சி.
கிணற்றில் விழுந்த மாட்டினை தீயணைப்பு துறையினர் மீட்ட காட்சி.
Published on

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே மேலபுளியங்குடி வயனற்காடு பகுதியில் அப்துல்வஹாப் என்பவருக்குச் சொந்தமான  தோட்டம் உள்ளது.  

இங்குள்ள கிணற்றில் காட்டுமாடு தவறி விழுந்து தத்தளித்தது. இதனை பார்த்த தோட்ட உரிமையாளர். வனத்துறையினர்,  தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் தெரிவித்தார்.

வாசுதேவநல்லூர் நிலைய அலுவலர்  சேக்அப்துல்லா தலைமையில் பால்ராஜ்,  மணிவண்ணன்,   ராஜதுரை, சிவக்குமார், கதிரேசன் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து காட்டு மாட்டினை பாதுகாப்பாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பின்பு கால்நடை மருத்துவர் வந்து ஆய்வு செய்து மாட்டினை வனப்பகுதியில் விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com