தென்காசியில் வியாபாரி தற்கொலை

தென்காசி நடு பேட்டை தெருவை சேர்ந்த முகமது நயினார் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை;

தென்காசி நடு பேட்டை தெருவை சேர்ந்தவர் முகமது நயினார் (வயது 51). இவர் பல்வேறு வியாபாரம் செய்து வந்தார். இதில் தொடர்ந்து அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்து காணப்பட்ட முகமது நயினார் கடந்த 10-ந்தேதி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com