

கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியின் முதல் கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராசைய்யா, நகர்மன்ற ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஸ்டான்லி ஜெபசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர், துணைத் தலைவர் உட்பட வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களுக்கும் தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும் தெருவிளக்குகள் மற்றும் கழிவு நீர் ஒடைகள் சுத்தம் செய்வது குப்பைகள் அள்ளுவது குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
தலைவர், துணை தலைவர் கொண்டுவந்த சிறப்பு தீர்மானம் கடையநல்லூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே மறைந்த தமிழக முதல்வர் மு கருணாநிதியின் வெங்கல திருவுருவ சிலையை நிறுவுவது உட்பட உறுப்பினர்கள் கொண்டு வந்த 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகரமன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் பேசுகையில். நகர மன்றத்தின் நிர்வாகம் வெளிப்படையாக இருக்கும். நகராட்சிக்கு தேவையான நிதியை தமிழக அரசிடம் பெற்று உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என பேசினர்.
முன்னதாக நகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்ட கூட்ட அரங்கை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும் அய்யாபுரம் கூட்டுறவு சங்க தலைவருமான செல்லத்துரை திறந்து வைத்தார்.