கனிமவள லாரிகளை கண்காணிக்க புளியரை சோதனை சாவடியில் சிறப்பு ஏற்பாடு

கனிமவள லாரிகளை கண்காணிக்க புளியரை சோதனை சாவடியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தமிழக-கேரள எல்லைப் பகுதியான புளியரை பகுதி வழியாக தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் கேரளாவிற்கு சென்று வருகின்றன.

இந்த நிலையில், கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் அதிகப்படியான பாரங்களை ஏற்றி செல்வதாகவும், தமிழகத்தில் இருந்து அதிகப்படியான கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன. 

இதுதொடர்பாக, தென்காசி மாவட்ட கலெக்டர் உரிய முறையில் விசாரணை நடத்திய  அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை கண்காணிக்கும் வகையில், தமிழக-கேரள எல்லையான புளியரை பகுதியில் வருவாய்த்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், இன்று முதல் புளியரை பகுதியில் வருவாய்த்துறை சார்பில் புதிய சோதனை சாவடி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

 இந்த சோதனை சாவடி மையத்தில் மண்டல துணை தாசில்தார் தலைமையில் 4 அதிகாரிகள் தினமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மறிக்கப்பட்டு உரிய முறையில் சோதனை செய்யப்பட்டு ஆவணங்களை சரிபார்த்த பின்னரே கேரளாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com