பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி -சிவபத்மநாதன் வழங்கினார்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்
ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வழங்கிய காட்சி.
ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வழங்கிய காட்சி.
Published on

வீ.கே.புதூர்:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி, பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பென்சிங் வேலி அமைக்க நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ. 1 லட்சத்தினை, தெற்கு மாவட்ட செயலாளர்  சிவபத்மநாதன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமாரிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி மருத்துவர் சுபா, கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி,  மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன்,  அட்மா சேர்மன் காந்திராமன், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேசன், தர்மராஜ், ராஜேஸ்வரி, தி.மு.க. நிர்வாகிகள் வைத்தீஸ்வரி, அருள் டால்டன், சொட்டு சுப்பிரமணியன், கபில்தேவதாஸ், மாஸ்டர் கணேஷ், குருசிங், முத்துபாண்டி, டேனியல், ஸ்டீபன் சத்தியராஜ், கார்த்தி, காலசாமி, சாலிமேரி, சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம், கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com