ஆலங்குளத்தில் புழுதிப்படலமாக மாறிய காய்கறி மார்க்கெட்

புழுதிப்படலமாக காட்சியளிப்பதால் ஆலங்குளம் காய்கறி மார்க்கெட் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
புழுதி சாலையாக மாறி உள்ள ஆலங்குளம் நெட்டூர் சாலை காய்கனி மார்க்கெட் பகுதி.
புழுதி சாலையாக மாறி உள்ள ஆலங்குளம் நெட்டூர் சாலை காய்கனி மார்க்கெட் பகுதி.
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் - நெட்டூர் ரோடு தொடங்கும் இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற காய்கனி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் மூலம் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கேரளத்திற்கு காய்கனிகள் கொண்டு செல்லப்படுகிறது. 

சந்தையை அடுத்த வடபுறத்தில் இருந்து கிழக்கு நோக்கி நல்லூர் சாலை உள்ளது. 7ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரு சாலைகளும் மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக இருந்தது.

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு நிதி மூலம் நெட்டூர் சாலையை சீரமைக்க ரூ. 17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவடைந்தது. தொடர்ந்து ரூ. 90 லட்சம் மதிப்பில் நல்லூர் சாலையும் சீரமைக்கப்பட்டது.

சுமார் ரூ.18 கோடி மதிப்பீட்டில் இரு பணிகளும் நடைபெற்று முடிந்த நிலையில் 300 மீட்டர் தூரமே உள்ள காய்கனி மார்க்கெட் பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கியும் வெயில் காலங்களில் புழுதிப் படலமாகவும் காட்சியளிப்பதால் இவ்வழியே மார்க்கெட் மற்றும் அரிசி ஆலைகளுக்குச் செல்லும் லாரி ஓட்டுநர்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

ரூ.18 கோடி செலவு செய்தும் 300 மீட்டர் தூர சாலையை நெடுஞ்சாலைத்துறை புறக்கணித்தது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே இந்த  300 மீட்டர் தூர சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com