சுரண்டையில் பஸ்சில் தவறவிட்ட பெண்ணின் தங்க சங்கிலி மீட்பு

சுரண்டை அருகே சாம்பவர்வடகரையில் பஸ்சில் தவறவிட்ட பெண்ணின் தங்க சங்கிலியை 30 நிமிடத்தில் போலீசார் மீட்டு, அவரிடம் ஒப்படைத்தனர்.
தவறவிட்ட பெண்ணிடம் தங்க சங்கிலியை ஒப்படைத்த போலீசார்.
தவறவிட்ட பெண்ணிடம் தங்க சங்கிலியை ஒப்படைத்த போலீசார்.
Published on

தென்காசி:

சுரண்டையில் இருந்து தென்காசி செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்த போது தனது தங்க சங்கிலி காணாமல் போனதாக சிவகுருநாதபுரத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் சுரண்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். 

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விமலா உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக சுரண்டையில் இருந்து தென்காசி சென்று கொண்டிருந்த பஸ்ச சாம்பவர்வடகரையில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது பஸ்சின் உள்ளே கிடந்த தங்கச்சங்கிலி மீட்கப்பட்டது.பின்னர் சங்கிலியை தவறவிட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சப்-இன்ஸ்பெக்டர் விமலா மீட்கப்பட்ட 3 சவரன் தங்கச்சங்கிலியை ஒப்படைத்தார். 

தொலைத்த 30 நிமிடத்தில் சங்கிலியை மீட்டுக்கொடுத்த காவல்துறையினருக்கு அப்பெண் கண்ணீர் மல்க தனது நன்றியினை தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com