செங்கோட்டை பகுதியில் பறக்கும் படை சோதனை தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி செங்கோட்டை பகுதியில் தாசில்தார் கருணாகரன் தலைமையிலான பறக்கும் படையினர், அரசு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் வருகின்றனர்.
செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவில் அருகே தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர்.
செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவில் அருகே தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர்.
Published on

செங்கோட்டை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் உள்ளநிலையில் தேர்தலையொட்டி, செங்கோட்டை நகராட்சிக்கு என நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், 3 குழுவாக சுழற்சி முறையில், நகராட்சியின் எல்லை பகுதியில் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.

தாசில்தார் கருணாகரன் தலைமையிலான பறக்கும் படையினர், அரசு அதிகாரிகளின் வாகனம் உள்பட அனைத்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.

செங்கோட்டை & பாவூர்சத்திரம் வழி சுரண்டை நெடுஞ்சாலை வரும் சொகுசு கார் மற்றும் வாகனங்களையும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அப்போது அவ்வழியாக வரும் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது காரில் வந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறினர்.

எனினும் அந்த காரை பறக்கும் படையினர் சோதனை செய்வோம் எனக்கூறி காரை முழுமையாக சோதனை செய்த பிறகே, செங்கோட்டை நகருக்குள் செல்ல அனுமதித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com