சிறுமிக்கு கட்டாய திருமணம்-வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த வழக்கில் வாலிபர் மற்றும் பெற்றோர் மீது போச்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புளியங்குடி:

தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் மாரித்துரை (வயது 25) இவருக்கும் உறவினர் மகளான 16 வயது சிறுமிக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

தற்போது குழந்தை உள்ளது.

இந்நிலையில் சிறுமிக்கு நடந்த குழந்தை திருமணம் குறித்து அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

 இதுகுறித்து வாசுதேவநல்லூர் ஒன்றிய மகளிர் பிரிவு அலுவலர் புளியங்குடி போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் சிறுமியை திருமணம் செய்த மாரித்துரை  மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது தந்தை கோட்டூர் சாமி, தாய் சுடலைமாடத்தி, சிறுமியின் தாய், தந்தை ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com