

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், கஜபூஜை, பூர்ணாஹூதி நடந்தது.
2&வது நாளான நேற்று வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக வேள்வி பூர்ணாஹுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. 8 மணிக்கு மேல் சித்தி விநாயகர், சங்கரலிங்க பெருமாள், சங்கரநாராயணர், கோமதி அம்பாளுக்கு வருஷாபிஷேக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
12 மணிக்கு கோவில் திருமண மண்டபத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது.
ஏற்பாடுகளை வருஷாபிஷேக கட்டளைதாரர்கள் சங்கரன்கோவில் ஏ.வி.கே. கல்வி குழும சேர்மன் அய்யாதுரைபாண்டியன், துணைச் சேர்மன் அல்லிராணி அய்யாத்துரைபாண்டியன் செய்து இருந்தனர்.