

வீ.கே. புதூர்:
கீழப்பாவூர் விளையாட்டு குழு சார்பில் தென்னிந்திய அளவிலான 3-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டிகள் 3 நாள்கள் நடைபெற்றன. இதில் 25அணிகள் கலந்து கொண்டன விளையாட்டு குழு நிறுவனர் பி.ஆர்.கே.அருண் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, விளையாட்டு குழுவின் கொடியை ஏற்றி வைத்தார்.
முதல் நாள் போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்ம-நாதன், தொழிலதிபர் எஸ்.பிரின்ஸ் தங்கம் ஆகியோரும், 2-ம் நாள் போட்டியை சபாநாயகர் அப்பாவு, 3-ம் நாள் போட்டிகளை கீழப்பாவூர் விளையாட்டு குழு கவுரவ தலைவர் எஸ்.செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல்பரிசு ரூ.75 ஆயிரம் தமிழ்நாடு காவல்துறை அணியினரும், 2-ம்பரிசு ரூ.50 ஆயிரம் சென்னை ஐ.சி.எப். அணியினரும், 3-வது பரிசு ரூ.20 ஆயிரம் தூத்துக்குடி துரைசிங் பிரதர்ஸ் அணியினரும், 4-வது பரிசு ரூ.20 ஆயிரம் கன்னியாகுமரி அளந்தங்கரை அணியினரும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம் ஈரோடு பி.கே.ஆர். அணியினரும், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம் ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி. அணியினரும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரம் கொல்லம் அணியினரும், 4-வது பரிசு ரூ.10 ஆயிரம் சென்னை சிட்டி போலீஸ் அணியினரும் பெற்றனர். அனைத்து அணிகளுக்கும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவிற்கு கீழப்பாவூர் விளையாட்டு குழு தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜாமணி, சுரேஷ், வைகுண்டராஜ், பொன்.அருணாசலமுத்துசாமி, துணைத்தலைவர் அன்பரசு, துணை செயலாளர் திலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.பி.இளங்கோ தொகுப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், தென்காசி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் அருள்.இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, சிவன்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், பேரூர் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கீழப்பாவூர் விளையாட்டு குழு நிறுவனர் பி.ஆர்.கே. அருண் தலைமையில் உறுப்பினர்கள் சுடலை பூபதி, முத்தையா, சுப்பிரமணியன், வீரன் சந்தனமுத்து, ராமர், மாடசாமி, இசக்கி முத்து ஆகியோர் செய்திருந்தனர். நடுவர் சுடலைமணி நன்றி கூறினார்.