சுரண்டையில் தொழில் அதிபருக்கு அரிவாள் வெட்டு

சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்த தொழில் அதிபரை ஒருவர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சுபாஷ் சந்திரபோஸ்
சுபாஷ் சந்திரபோஸ்
Published on

சுரண்டை:

சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 61). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 

நேற்று வீரசிகாமணியில் இருந்து சுரண்டைக்கு சுபாஷ் சந்திரபோஸ் சென்று கொண்டிருந்தார். குலையநேரிஅருகே சென்ற போது இரட்டை குளத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் சுபாஷ் சந்திர போசை வழிமறித்து அரிவாளால் வெட்டி உள்ளார். 

தலையில் பலத்த காயமடைந்த அவரை சுரண்டை போலீசார் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். 

மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துசாமியை தேடி வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com