ஒட்டன்சத்திரம் அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல் சாலை மறியலால் பரபரப்பு

திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் வழிபாடு அனைத்து சமூகத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருவிழாவில் ஒரு பிரிவினர் துர்க்கை அம்மனுக்கு நேர்த்தி கடனாக கொண்டு வந்த நகைகளை தூக்கி வீசியும், தீர்த்த கலசங்களை செலுத்த விடாமலும், முளைப்பாரிகளை எடுத்துச் செல்ல விடாமலும் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தங்கச்சியம்மாபட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தாங்கள் வழிபாடு செய்வதற்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com