பொள்ளாச்சியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்

இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண் மகனுடன் வெளியில் சென்றார்.
பொள்ளாச்சியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்
Published on

கோவை 

பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவ–ருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

இந்த விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்தார். ஆனாலும் இளம்பெண் வாலிபருடனான கள்ளக்கா–தலை தொடர்ந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மகனுடன் வெளியில் சென்றார். அதன்பின்னர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதுகுறித்து இளம்பெ–ண்ணின் கணவர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மனைவிக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றிய தகவல் எனக்கு தெரிந்ததும், நான் எனது மனைவியை கண்டித்தேன். இதனால் எனது மனைவி எனது மகனுடன் அந்த வாலிபருடன் சென்றி–ருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எனவே எனது மனைவி மற்றும் மகனை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com