தேனியில் பள்ளி மாணவியை கடத்திச்சென்ற வாலிபருக்கு வலை

சம்பவத்தன்று பள்ளியில் இருந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மாணவி அதன்பிறகு வெளியே சென்றவர் மாயமானார். மாணவியின் தாய் அப்பகுதியை சேர்ந்த வாலிபரின் மீது அளித்த கடத்தல் புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவை சேர்ந்த சன்னாசிராஜா மகள் சங்கீதா(17). இவர் கெங்குவார்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளியில் இருந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு வெளியே சென்றவர் மாயமானார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை். இதுகுறித்து மாணவியின் தாய் மகேஸ்வரி தேனி போலீசில் புகார் அளித்தார். அந்தபுகாரில் தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் என்பவர்தான் தனது மகளை கடத்திச்சென்றிருக்ககூடும். எனவே அவரை கண்டுபிடித்து எனது மகளை மீட்டு தரவேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் சுருளிபட்டி 2-வது வார்டு வடக்குதெருவை சேர்ந்த சிரஞ்சீவி மகள் யுகேஸ்வரி(18). இவர் கம்பத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் கவுசல்யா ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com