முன் விரோதத்தில் வாலிபர் வெட்டிக் கொலை- 2 பேர் கைது

கடந்த தீபாவளி அன்று ஒன்றாக சேர்ந்து மதுகுடித்த போது தகராறு ஏற்பட்டது.கவியரசன், அழகேசன் சேர்ந்து அரிவாளால் ஆர்யாவை வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
முன் விரோதத்தில் வாலிபர் வெட்டிக் கொலை- 2 பேர் கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்யா (வயது 19). ராமாபுரத்தை சேர்ந்தவர் கவியரசன் (22).

இவர்கள் இருவரும் கடந்த தீபாவளி அன்று ஒன்றாக சேர்ந்து மதுகுடித்த போது தகராறு ஏற்பட்டது.

பின்னர் இருவரும் சமரசமாகி சென்று விட்டனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தஞ்சை அடுத்த வீரமரசன்பேட்டை கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவை கவியரசன் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆர்யா தீபாவளி சம்பவத்தை நினைவு கூறினார்.

இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளில் தஞ்சை அடுத்த வயலூர் பகுதிக்கு சென்று மது அருந்தினர்.

அப்போது கவியரசன் தனது நண்பர் அழகேசனை செல்போனில் தொடர்பு கொண்டு வயலூருக்கு வருமாறு கூறினார். அதன்படி அவரும் வந்தார்.

பின்னர் ஏற்கனவே உள்ள முன்விரோதத்தை மனதில் கொண்டு கவியரசன், அழகேசன் சேர்ந்து அரிவாளால் ஆர்யாவை வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

இந்த தாக்குதலில் ஆர்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசன், அழகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

X

Maalai Malar
www.maalaimalar.com