திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆர்.எஸ். ரோடு, வி.ஐ.பி. நகரைச் சேர்ந்தவர் ரஞ்சிதம் (51). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவர்களது மகன் சக்தி வேல் (31). ஈரோட்டில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவ னம் ஒன்றில் பீஸ் செக்கிங் வேலை பார்த்து வருகிறார்.

சக்திவேல் தனக்கு திருமணமாகவில்லை என விரக்தியில் இருந்து வந்ததா கத் தெரிகிறது. இந்த நிலை யில் சம்பவத்தன்று அதிகாலையில் விஷம் குடித்த சக்திவேல் அலறியுள்ளார்.

தாய் ரஞ்சிதம் அவர் படுத்திருந்த அறைக்கு சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலை யில் சக்திவேல் கிடந்து ள்ளார். உடனடியாக சக்தி வேலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com