கோவையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

உமாதேவி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

சூலூர்,

சூலூர் அருகே காடாம்பாடியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் மகன் மாரிமுத்து (வயது48). இவர் காளீஸ்வரி என்பவரை முதல் திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

அதன் பின்னர் காளீஸ்வரியை பிரிந்து உமாதேவி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது 2-வது மனைவியும் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனை அடுத்து முதல் மனைவி பணியாற்றும் கம்பெனியில் இவர் வேலைக்கு சேர்ந்து மீண்டும் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ அவரிடம் முறையிட்டுள்ளார். இதனை காளீஸ்வரி ஏற்றுக் கொள்ளாததால் மனமுடைந்து தினமும் மது குடித்து வந்துள்ளார். குடிபோதையில் அவ்வப்போது தன்னுடன் சேர்ந்து வாழுமாறு காளீஸ்வரியிடம் கூறினார்.

சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாரிமுத்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com