கோவையில் திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை

மனைவி கண்டித்ததால் சபரிகிரி மன வேதனையுடன் இருந்து வந்தார்.நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
Published on

கோவை,

பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டியை சேர்ந்தவர் சபரிகிரி (வயது27). தனியார் கம்பெணியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் சபரிகிரிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவி கண்டித்ததால் சபரிகிரி மன வேதனையுடன் இருந்து வந்தார். இதையடுத்து கயல்விழி குளியல் அறைக்கு சென்று விட்டு திரும்ப வந்து வீட்டின் கதவை திறந்த போது கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. பின்னர் நீண்ட நேரம் கதவை தட்டியும் சபரிகிரி திறக்காதால் கயல்விழி அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சபரிகிரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதறி அழுதார். இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com