திண்டிவனம் டி.எஸ்.பி அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டிவனம் டி.எஸ்.பி அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் டி.எஸ்.பி அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டி.எஸ்.பி அலுவலகம் அருகே உள்ள கர்ணாவூர் பாட்டை ரோடு, சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் டி.எஸ்.பி அலுவலகம் எதிர் வீட்டில் வசிக்கும் ஆனஸ்ட் ராஜ் (வயது 21) என தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com