பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது

மீனம்பநல்லூர் கிராமத்தில் இருசக்கர வாகன பழுது நீக்கம் செய்யும் மையம் நடத்தி வருகிறார்.11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமண ஆசை கூறி கடத்திச் சென்றுள்ளார்.
பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவர் மீனம்பநல்லூர் கிராமத்தில் இருசக்கர வாகன பழுது நீக்கம் செய்யும் மையம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டி யில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமண ஆசை கூறி கடத்திச் சென்றுள்ளார்.இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ்கண்ணா மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com