இளம்பெண் தற்கொலை

குடும்ப தகராறில் மனவேதனை அடைந்தவர் வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்து குடித்தார். சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இளம்பெண் தற்கொலை
Published on

திருவோணம்:

ஒரத்தநாடு அருகே உள்ள சில்லத்தூர் அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் செல்லையன். இவரது மகள் அனிதா.

இவருக்கும், கந்தர்வகோட்டை அருகே உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிவேலுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடை பெற்றது. இந்நிலையில் அனிதா விற்கு மணிவே லுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அனிதா தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.

குடும்பதாகராறில் மனவே தனை அடைந்த அனிதா வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்து குடித்து மயங்கினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருமணம் ஆகி சில மாதங்களில் இளம் பெண் இறந்ததால் தஞ்சை கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com