களக்காடு அருகே இளம்பெண் மாயம்

சுப்புலெட்சுமி கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். இசக்கிபாண்டி பல்வேறு இடங்களில் தேடியும் சுப்புலெட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
களக்காடு அருகே இளம்பெண் மாயம்
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலங்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவரது மகள் சுப்புலெட்சுமி (வயது21). கடந்த 15-ந் தேதி சுப்புலெட்சுமி, கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிபாண்டி பல்வேறு இடங்களில் தேடியும் சுப்புலெட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சுப்பு லெட்சுமியை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com