சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று சில்மிஷம் செய்துள்ளார். இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
Published on

சேலம்:

சேலம் மல்லூரை சேர்ந்த 16 வயது சிறுமியை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கந்தசாமி மகன் வேலு(வயது25) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 25-ல் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று சில்மிஷம் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் படி மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது செய்தனர்.

இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, வாலிபர் வேலுக்கு 10ஆண்டு சிறை தண்டனையுடன் 6000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com