பாம்பு கடித்து இளம்பெண் சாவு

6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. தோட்டத்தில் முருங்கைக்கீரை பறிப்பதற்காக சென்றுள்ளார்.
பாம்பு கடித்து இளம்பெண் சாவு
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சி வானவன் மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவரது மனைவி கனகா (வயது 30). இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

நேற்று கனகா வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் முருங்கைக்கீரை பறிப்பதற்காக சென்று கீரை பறித்துக் கொண்டிருந்தார் அப்போது கீழே இருந்த பாம்பு கடித்து விட்டது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி கொண்டு போய் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி கனகா இன்று அதிகாலை இறந்துவிட்டார். புகாரின் பேரில் தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com