பரமத்திவேலூர் அருகே விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

பரமத்திவேலூர் அருகே விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம், நல்லூர் கிராம விவசாயிகளுக்கு, மானாவாரி நில மேம்பாட்டு 'முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்'' குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில், கோடை காலத்தில் கிடைக்கும் மழை நீரைப் பயன்படுத்தி உழவு செய்வதால், மண்வளத்தை மேம்படுத்தலாம்.

மண் அரிமானம் தடுக்கப்பட்டு, காற்றோட்டம் கிடைக்கும். அடுத்த–டுத்து பொழியும் மழைநீர் வீணாகாமல், அந்த நிலத்திலேயே உறிஞ்சப்ப–டுவதால், மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. பயிர் சுழற்சி, பருவப்பயிர்கள், சிறுதானியப்பயிர்கள் மற்றும் அருந்தானி–யப்பயிர்கள் பயிரிடுவதன் மூலம் குறைந்த நாளில் அதிக மகசூல் அதிக லாபம் பெறலாம் என பயிற்சி வழங்கினார்.

பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் (ஓய்வு) மாதேஸ்வரன் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மானாவாரி நில மேம்பாடு மற்றும் மானாவாரிக்கு ஏற்ற பயிர் இரகங்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், மண் வளம், சமுக காடுகள் அமைத்தல் போன்ற காரணிகள் குறித்து பயிற்சி வழங்கினார்.

பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், தமிழக முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கி நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com