இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியர் தினவிழா

யு.கே.ஜி. மாணவர் முகுந்தன் சுப பைரவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.விழாவில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு குரு சமர்ப்பணம் செய்தனர்.
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில்  ஆசிரியர் தினவிழா
Published on

தென்காசி:

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியர் தினவிழாவினை முன்னிட்டு குரு சமர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். முன்னதாக மாணவி அனுபாமா, ஹரிணி இறைவணக்கப் பாடல் பாடினர். ராபியாஸனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். இதில் யு.கே.ஜி. மாணவர் முகுந்தன் சுப பைரவ் டாக்டர் ராதாகிருஷ்ணன் போல் வேடமணிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மழலையர் பிரிவு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் டாக்டர் ராதாகிருஷ்ணன் போல வேடமணிந்து வந்திருந்தனர். மேலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் மகாபாரதம், ராமாயண கதாபாத்திரங்கள் வேடமணிந்து யாகசாலை அமைத்து இறைவழிபாடு நடத்தினர். தொடர்ந்து 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு குரு சமர்ப்பணம் செய்தனர். முடிவில் மாணவி ரட்சனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com