முல்லை பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க பி,ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

இந்த பயணம் கர்னல் ஜான்பென்னிக்குவிக் நினைவு இடத்தில் நிறைவடைந்தது. பின்னர் தேனியில் முல்லை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

கிருஷ்ணாநதியில் ஆந்திராவும், காவிரியில் கர்நாடகாவும், முல்லை பெரியாற்றில் கேரளாவும் தமிழக உரிமைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இதற்கு மத்திய அரசு ஆதரவாக உள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சதிசெய்கின்றன. முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அணையை பலப்படுத்தும் நடவடிக்கையை தொடங்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெரியாறு அணையில் 132 அடிக்கு மேல் தேக்கவிடமாட்டோம் என கேரள கவர்னரின் சட்டசபை உரையை சட்ட விரோதம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 142 அடிவரை தண்ணீர் தேக்க உரிமையை பெற்றுத்தந்தார். தற்போது கேரளா அரசு அதை பறிக்கப் பார்க்கின்றது. எனவே தமிழக உரிமையை முதல்வர் ஸ்டாலின் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக தேனி முதல் ராமநாதபுரம் வரையில் விவசாயிகள் பங்கேற்கும் போராட்டம் 15ம் தேதி மதுரையில் நடக்கிறது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com