தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Published on

திருவாரூர்:

நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ராஜஸ்தான் மற்றும் சட்டீஷ்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் வழங்கப்படுவது போல் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கணேசன், மாவட்டச்செயலாளர் ரெ.ஈவேரா ஆகியோர் கவன ஈர்ப்பு உரையாற்றினர். இதில் மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நட.ஜெயசீலன், அமிர்தராஜ், ஜெயந்தி, மகளிர் வலையமைப்பு அமைப்பாளர் கல்யாணி, அமைப்புச் செயலாளர் கிருபாராணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் வடுகநாதன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com