சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பிளேடால் உடலை வெட்டிய வாலிபர்

கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக பிளேடால் வெட்டியதில் வாலிபருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் நுழைவு வாயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரை சென்று பிடித்தனர். அப்போது அவர் ஆவேசமாக கத்தினார். பின்னர் அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பிளேடால் உடலை வெட்டிய வாலிபர்
Published on

சென்னை:

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3-வது கேட் நுழைவு வாயில் அருகே இன்று காலை வாலிபர் ஒருவர் வந்தார்.

அவர் திடீரென தனது உடலில் பிளேடால் வெட்டி கூச்சல் போட்டார். கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக பிளேடால் வெட்டியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் நுழைவு வாயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரை சென்று பிடித்தனர். அப்போது அவர் ஆவேசமாக கத்தினார். பின்னர் அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பிளேடால் உடலை வெட்டிய வாலிபர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவரது பெயர் ஹானஸ்ட் ராஜ் என்பது தெரியவந்தது.

பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த இவரது சகோதரர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதும், அவரை பார்க்க சென்றபோது அனுமதிக்காத காரணத்தாலேயே ஹானஸ்ட்ராஜ் இது போன்று நடந்து கொண்டதும் தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com