ஓசூரில் பெண்ணை வைத்து விபசாரம் நடத்திய வாலிபர் கைது

போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில், விபசாரம் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவாகி விட்ட ஸ்பா உரிமையாளர் ராஜ்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூரில் பெண்ணை வைத்து விபசாரம் நடத்திய வாலிபர் கைது
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள ஒரு 'ஸ்பா'வில், பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவதாக, ஓசூர் அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று மாலை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில், விபசாரம் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்பா மேலாளர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ரம்ஷாத் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி விட்ட ஸ்பா உரிமையாளர் ராஜ்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com