

நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள குருங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது 2-வது மகன் விக்னேஸ்வரன் (வயது 23). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இவர் தனது தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக பணம் கேட்டுள்ளார். தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த விக்னேஸ்வரன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்துவிட்டார்.
உடன் விக்னேஸ்வரனை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஸ்வரன் இறந்தார். தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.