திருமணமான 8 மாதத்தில் மனைவி பிரிந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே திருமணமான 8 மாதத்தில் மனைவி பிரிந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கொம்பேரிப்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவருக்கும் உடையாப்பட்டி பாலமுருகன் கோவில் பகுதியை சேர்ந்த பிரியா (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து நேற்று உடையாப்பட்டிக்கு வந்த மணிகண்டன் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் காந்தாஸ்ரமம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com