

சென்னை:
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி ஈஸ்வரி பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு கார்த்திக் (வயது 21).
இவர் பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருந்தார். இவரது காதலி கடந்த மாதம் உயிரிழந்தார். இதனால் பிரபு கார்த்திக் கடுமையான மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு தனது நண்பர்களுக்கு நன்றி அப்பா மற்றும் அத்தை மன்னித்து விடுங்கள், பாத்துக்கோங்க, யாரைவது நான் கஷ்டப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் என்று வாட்ஸ்அப் மூலம் பதிவிட்டார்.
இறப்பதற்கு முன்பாக தூக்கு தயாராகி விட்டது. அதனை வாட்ஸ்அப்பில் பதிவு செய்யுங்கள் என்று அவரது நண்பர்கள் லட்சுமண் மற்றும் அஜித் குமார் ஆகியோருக்கு போன் செய்து தெரிவித்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக நண்பர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்த தகவல் அடிப்படையில் பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பிரபு கார்த்திக் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.