கள்ளக்குறிச்சி அருகே வீட்டை விட்டு சென்ற வாலிபர் திடீர் மாயம்

கள்ளக்குறிச்சி அருகே வீட்டை விட்டு சென்ற வாலிபர் திடீரென மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயம்
மாயம்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் போலீஸ் சரகம் திம்மலை புது காலனி பகுதியை சேர்ந்தவர் மாயவன். அவரது மகன் மகேந்திரன் (வயது 32) இவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டதால் திம்மலையில் வந்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த மாதம் 22-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து இவரது தாய் கொளஞ்சியம்மாள் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மகேந்திரனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com