சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

புகாரின்பேரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
Published on

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சவுதாபுரம் ஓலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). வெல்டிங் தொழிலாளி. இவர் காளிப்பட்டி சின்ன பூசாரி காடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டு அவரை வெளியூருக்கு அழைத்து சென்றார்.

இது குறித்த புகாரின்பேரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பிரகாஷை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com