ஆண் நண்பரை மிரட்டி இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
ஆண் நண்பரை மிரட்டி இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்ணை மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் ஏற்கனவே 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com